பதுளையில் ஒன்றிணைந்த எதிரணியினரின் பேரூந்தின் மீது தாக்குதல்

0
430
Attack joint opponents bus Badulla

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பேரூந்தொன்று மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. (Attack joint opponents bus Badulla)

இந்த தாக்குதல் சம்பவம் பதுளை போகஹமடித்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் ஆதரவாளர்களின் பேரூந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரூந்தில் ஆட்களை ஏற்றிக்கொண்டிருந்த போது, இலக்கத்தகடு பொருத்தப்படாத கெப் ரக வாகனம் ஒன்றில் சென்ற சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Attack joint opponents bus Badulla