கூட்டு எதிரணி ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசேட தகவல்!

0
329

கொழும்புக்கு வருகைதரும் கூட்டு எதிர்க்கட்சியினரிடமிருந்து விசேட நீதிமன்றங்கள், பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பவற்றைப் பாதுகாக்க இன்று (05) விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். Police Minister Said Special Information Opposition Party Protest Tamil News

விசேட வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணப்படும் இடங்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பேரணியாகச் செல்வதற்கும், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கும் தடை இல்லை என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள பாரிய ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடம் தொடர்பில் இறுதியான முடிவொன்று இதுவரை இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஒரு சிலர் தற்பொழுது கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், சில பஸ் வண்டிகள் நேற்று இரவே கொழும்பை வந்தடைந்ததாக கூட்டு எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites