ஜனநாயகத்தின் குரல் சோபியாவை விடுதலை செய் – இயக்குனர் பா.ரஞ்சித்

0
623

பாஜக அரசை விமர்சனம் செய்த ஆராய்ச்சி கல்லூரி மாணவி சோபியா கைது செய்யப்பட்டதை கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.voice democracy liberate sophia – director p.ranjith

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் சோபியா என்ற ஆராய்ச்சி மாணவி பயணம் செய்தார். அதே விமானத்தில் நேற்று தமிழிசை சவுந்திரராஜனும் பயணம் செய்தார்.

தூத்துக்குடியை சேர்ந்த சோபியா கனடாவில் ஆராய்ச்சி மாணவியாவார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றை கேள்விப்பட்ட அவர் அந்த விமான நிலையத்தில் தமிழிசையை பார்த்தவுடன் கோஷமிட்டுள்ளார்.

அப்போது பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதனால் தமிழிசைக்கும் சோபியாவிற்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று மாலையே அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் ஆராய்ச்சி கல்லூரி மாணவி சோபியாவை விடுதலை செய்யக்கோரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

voice democracy liberate sophia - director p.ranjith

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :