அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது

0
545
Two arrested athurugiriya

அத்துருகிரிய அதிவேக நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் கைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் இருவரை இன்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். (Two arrested Athurugiriya)

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்றைய தினம் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனையிட்ட போதே சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரு கைக்குண்டுகளும் ஹெரோயின் 830 கிராமும் கைப்பற்றப்பட்டப்பட்டுள்ளது.

வெலிகம மற்றும் பேருவளை பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two arrested athurugiriya