யுத்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடியவர்கள் கைது

0
283
TAMIL NEWS Seven arrested connection searching gold buried LTTE

(TAMIL NEWS Seven arrested connection searching gold buried LTTE)

தமிழீழ விடுதலைப் புலிகளால் இறுதி யுத்தக் காலத்தில் புதைக்கப்பட்டதாக கருதப்படும் தங்கத்தை தேடிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியிலுள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

இதனடிப்படையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் டி சரத் சந்திரபாலவின் வழிகாட்டலில்  பொலிஸ் அணியினர் குறித்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டில் இருந்து கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்து இன்று குறித்த இடத்தை தோண்டும் நடவடிக்கை இடம்பெறும் போது குறித்த 7 பெயரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட நகைகள் ஒரு பெட்டியில் குறித்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தே அகழ்வில் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் மாத்தறை, சிலாபம், மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

(TAMIL NEWS Seven arrested connection searching gold buried LTTE)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites