இயக்குனர் ஷங்கருக்கு அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்

0
581
Madras High-Court imposes fine Shankar, Madras High-Court imposes fine, Madras High-Court imposes, High-Court imposes fine Shankar, Shankar, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, tamil movie news, new tamil movie news
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் ‘எந்திரன்’. இந்த ‘எந்திரன்’ படத்தின் கதை தான் எழுதியது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.Madras High-Court imposes fine Shankar
அதில், ‘1996ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் பத்திரிகைக்கு தொடர் கதை எழுதினேன். ஆனால் அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்திருக்கிறார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குனர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்றைய தினம் நீதிபதி சுந்தர் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 12ம் திகதிக்கு தள்ளிவைத்தார்.
Tag: Madras High-Court imposes fine Shankar