அலரி மாளிகை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமணம் தொடர்பில் மகிந்த தரப்பினர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். Chathura Wedding Temple Tree Bill
ஆனால் ‘அங்கீகரிக்கப்பட்ட சில விதிமுறைகளுக்கு அமையவே, அதாவது வெளிவாரியான நிகழ்வுகளுக்கு வழங்கப்படுகின்ற கட்டணங்களுக்கு அமையவே குறித்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டது என்று சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அலரிமாளிகையில் திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்த மண்டபம் ஒன்று காணப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமணத்தை அலரிமாளிகை வளாகத்தில் நடத்துவதற்கு தலைமை அமைச்சர் அலுவலகத்தால் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனுமதியானது இலவசமாகவோ அல்லது மக்களின் பணத்தை முறையற்ற வகையில் கையாளும் விதத்திலோ வழங்கவில்லை. இங்கு திருமணம் நடத்துவதற்காக 21 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.
இதற்கமையவே இந்த திருமணம் நடத்தப்பட்டது. ஆனால் மகிந்த தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே அலரிமாளிகை தன்சல சாலை போன்று காட்டசியளித்ததை மறந்து விட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி