நான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே முதல்வர் ஆகியிருப்பேன் – டி.டி.வி.தினகரன்

0
666
ttv thinakaran don't like chief minister tamilnadu 2001

தான் முதலமைச்சராக வேண்டும் என நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே ஆகியிருப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.ttv thinakaran chief minister tamilnadu 2001,tamil news

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் தமிழக அமைச்சர்களிடையே மீண்டும் வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நேற்று முன்தினம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே முதல்வராக வேண்டும் என டிடிவி தினகரன் சதி செய்ததாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டு செல்ல தவறிய தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய தினகரன், தான் முதல்வராக வேண்டும் என நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டிலேயே ஆகியிருப்பேன் என தெரிவித்தார்.

மேலும் இடைத்தேர்தல் வர உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் குக்கர் என்ற டோக்கனை ஏற்கனவே கொடுத்து விட்டதாகவும் தினகரன் கூறினார்.

இந்நிலையில், நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுகவில் உள்ளவர்கள் தன்னுடன் வர தயாராக இருப்பதாக தினகரன் கூறியிருப்பது மிக சிறந்த காமெடி எனக் கூறியுள்ளார்.

இதேபோல் விருதுநகரில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுகவில் பதவி இல்லாதவர்கள் இணைந்து ஒரு கட்சி ஆரம்பித்துள்ளதாக தினகரனை விமர்சித்தார்.

அமைச்சர்கள் மற்றும் தினகரன் இடையே மோதல் மீண்டும் முற்றியுள்ள நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, டி.டி.வி.தினகரன் அதிமுகவில் இணைய வேண்டும் என்றும் அவ்வாறு இணைந்தால் அவருக்கு தமிழக அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் இது தொடர்பாக தினகரனிடம் ஒருமுறை பேசியதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிமுகவும், தினகரனும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் மிகப்பெரிய வெற்றியை பெறலாம் என்றும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :