ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு கடும் எதிர்ப்பு..!

0
282
Sri reddy bio pic movie banned director Varagi

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் வாராகி, திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.Sri reddy bio pic movie banned director Varagi

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-

தெலுங்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நடிக்க வாய்ப்பு தருவதாக தவறுதலான பாதைக்கு அழைத்ததாக அனைவரது மீதும் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது ஆந்திராவில் பாதுகாப்பு இல்லையென கூறி தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் தங்கி இருக்கிறார்.

இவருடைய வாழ்க்கைப் படமாக தமிழ் சினிமாவில் தயாராகிறது. அப்படத்திற்கு ”ரெட்டி டைரி” என்று பெயர் வைத்துள்ளனர். அப்படத்தில் நடிகையாக ஸ்ரீரெட்டியே நடிக்கிறார்.

சித்திரைச்செல்வன், ரவிதேவன் படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தில் அனைவரையும் காட்சிப்படுத்த போவதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இப்படத்திற்கு எவரேனும் தடை விதிக்க முற்பட்டால் விளைவுகள் விபரிதமாக இருக்கும் என்று அனைவரையும் எச்சரிக்கும் விதமாக கூறினார் ஸ்ரீரெட்டி. ஆனால், ”ரெட்டி டைரி” படத்திற்கு இயக்குநர் வாராகி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது.. :-

”ரெட்டி டைரி படத்தை உருவாக்குவது என்பது கலாச்சாரத்துக்கு எதிரானது. ஸ்ரீரெட்டியின் கதையை படமாக எடுக்க கூடாது. படத்திற்கு ரெட்டி டைரி என்ற பெயர் கண்டிக்கத்தக்கது.

இப்படத்தை மீறி எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த படத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்” என்றார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

சர்கார் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..!

ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!

விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!

காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!

காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு கோடிக்கணக்கில் நிதி வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மான்..!

சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Sri reddy bio pic movie banned director Varagi