புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு

0
631
scholarship examination papers correction completed

கடந்த ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்த 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. (scholarship examination papers correction completed)

தற்போது பெறுபேறுகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி 3050 மத்திய நிலையங்கள் ஊடக நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 55 ஆயிரம் 326 மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் 87 ஆயிரத்து 556 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் தோற்றியிருந்தனர்.

புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பிட்டு பணிகள் கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை 428 மதிப்பீட்டுச் சபைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் கடந்த 23 ஆம் திகதியில் இருந்து, இந்த மாதம் 5 ஆம் திகதி வரை 37 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனால் குறித்த 37 பாடசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதியே மூன்றாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; scholarship examination papers correction completed