புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது

0
582
Person arrested fake Rs5000 notes Pettah

புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இன்று காலை 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 13 உடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Person arrested fake Rs5000 notes Pettah)

அம்பாறை, இறக்காமம் 03 பகுதியை சேர்ந்த 39 வயதுடைய அப்துல் லதீப் நிசார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 5000 ரூபா நாணயம் ஒன்றை பேருந்து நடத்துநர் ஒருவருக்கு வழங்கி மாற்றித் தருமாறு கேட்ட போது, நடத்துநருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அவர் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு இதுதொடர்பில் அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பொலிஸார் குறித்த நபரை கைதுசெய்து விசாரணை செய்த போது குறித்த நபரிடம் இருந்து 5000 ரூபா போலி நாணயத் தாள்கள் 13 கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றவியல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Person arrested fake Rs5000 notes Pettah