வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது

0
759

இரண்டு கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். (Person arrested BIA foreign currency worth Rs28 million)

இன்று முற்பகல் 11.00 மணியளவில் யூஎல் 308 விமானத்தில் வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் சிங்கப்பூர் செல்வதற்கு முயற்சி செய்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 25 வயதுடைய நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறைத்து வைக்கப்பட்ட யூரோ, கட்டார் ரியால், சுவிஸ் பிராங்க், டென்மார்க் க்ரோனர், சவூதி ரியால் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags;