அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம்; நாமல்

0
164
Namal rajapaksa comments sri lanka government

எதிர்வரும் 05 ஆம் திகதி திட்டமிட்டமை போன்று மக்கள் எழுச்சிப் பேரணியை நடத்தி அரசாங்கத்தை கவிழ்த்தே தீருவோம் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். (Namal rajapaksa comments sri lanka government)

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் அச்சப்பட்டு பேரணியைத் தடுப்பதற்கான சதி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் எனினும் பேரணில் மக்கள் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் சத்தியாக்கிரகம் மற்றும் எழுச்சிப் பேரணி நடத்தவுள்ளதனால் பொலிஸ் அதிகாரிகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் உயரதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Namal rajapaksa comments sri lanka government