அரச வளங்களை தனியார் மயப்படுத்தும் ஒரே நோக்கத்தில் அரசாங்கமும், மீண்டும் ராஜபக்ஷக்களை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது எதிரணியும் அரசியல் செய்துவருகின்றன. இரண்டு கள்வர்களையும் விரட்டியடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். JVP Leader Anura Kumara Dissanayake Statement Tamil News
கோத்தா, பஷில் இருவரும் அமெரிக்க பிரஜைகள். அமெரிக்கா என்ன சொல்கின்றதோ அதையே செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்ட அவர்,
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் வளங்களை விற்று அதன் மூலமாக வருமானத்தை தேடிக்கொள்வதை மட்டுமே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. இன்று இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளையும் விற்கும் திட்டத்தினை வகுத்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :