வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரை இன்னும் ஒரு வாரத்தில் சிறைக்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Ganasara Thero refusing Jail Shorts
சிறைச்சாலை மருத்துவமனையில் ஞானசார தேரருக்கு அரைக் காற்சாட்டை வழங்கப்பட்டுள்ளது. எனினும் அதை அணிய அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே தான் அரைக் காற்சட்டையை அணிவேன் என்று ஞானசார தேரர், சிறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார் என்று தெரியவருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் காவியைக் கழற்றப் போவதில்லை எனவும் அவர் கூறி யுள்ளாராம்.
வெலிக்கடைச் சிறைச்சாலை நிர்வாகம் இது தொ டர்பாக சிறைச்சாலைகள் தலைமையகத்துக்கு அறிவித்துள்ளது. ஞானசார தேரர் அரைக் காற்சட்டை அணிய மறுப்பது தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறைச்சாலை தலைமையகம் நீதியமைச்சிடம் வினவியுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஞானசார தேரருக்கு அண்மையில் சிறி ஜயவர்தனபுர மருத்துவ மனையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து அவர் வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் பலி