ஒழுக்கத்தை கடைபிடிக்க சொன்னால் சர்வாதிகாரி என்பதா? – நரேந்திர மோடி

0
708
dictator say discipline - narendra modi

ஒழுக்கத்தைக் கடைபிடிக்கச் சொல்பவர்களை சர்வாதிகாரி என்று முத்திரை குத்துவதாக பிரதமர் நரேந்திர மோதி வேதனை தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.dictator say discipline – narendra modi

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அந்த பணியில் ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளார்.

குடியரசுத் துணைத் தலைவ ராக தனது ஒரு ஆண்டு அனுபவங் கள் குறித்து, ‘முன்னேற்றத்தை நோக்கிய முன்னேற்றம் – பணியில் ஒரு ஆண்டு’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தை டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மோதி, “நாடு இப்போது இருக்கும் நிலையில், ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்வது ஜனநாயக விரோதமாக பார்க்கப்படுகிறது.

ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று யாராவது சொன்னால், அப்படி சொல்பவர்களை சர்வாதிகாரி என்று முத்திரை குத்தி விடுகின்றனர்.

வெங்கய்ய நாயுடு மிகுந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டவர். எல்லா நிலையிலும் அவர் ஒழுக்கத்தை பின்பற்றி வந்துள்ளார்.

வெங்கய்ய நாயுடு வாட்ச் அணிவது இல்லை. இருந்தாலும், அவர் செல்ல வேண்டிய நிகழ்ச்சிக்கு சரியான நேரத்துக்கு சென்று விடுவார்.

நேரத்தை வீணாக்காமல் கட்டுப்பாட்டுடன் கடைபிடிப்பார்.” என்று பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி : மூடப்படுகிறதா நேரடி கொள்முதல் நிலையங்கள்?

நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படப் போகிறது என்று நேற்று செய்திகள் உலவின. இந்த செய்தியோடு ரேஷன் கடைகளும் மூடப்பட போகிறது என்ற தகவலும் சமூக ஊடகங்களில் பரவியது.

இப்படியான சூழ்நிலையில், தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

“விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும்.

மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படவில்லை. சட்டப்பூர்வ விதிகள் காரணமாகத்தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மத்திய அரசின் முகவராக இருந்து கொண்டுதான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்கிறோம்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்படும்.

மேலும், அக்டோபர் மாதத்தில் புதிய ஆதாரவிலை அறிவிக்கப்படும். இது ஏற்கெனவே உள்ள நடைமுறைதான்.

அதே நேரத்தில் வட்டத் தலைநகரங்களில் உள்ள பகுதிகளில் கொள்முதல் நிலையங்கள் செயல்படும். மேலும், நிகழாண்டில் வெளிப்பகுதியில் நெல்லுக்கான விலை குறைத்து வழங்கப்படுவதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களை நாடுகின்றனர்.

எனவே, எந்தெந்த இடங்களில் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதோ, அங்கு விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையங்கள் உடனடியாகத் திறக்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன” என்று திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :