எதிர்கட்சிகளின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை – சம்பிக்க ரணவக்க

0
390
Champika said no truth waste worn Singapore brought Sri Lanka

(Champika said no truth waste worn Singapore brought Sri Lanka)

சிங்கப்பூரில் வௌியேற்றப்படும் கழிவுகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என்று மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனை நகரில் 90 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளை கொண்ட நவீன பஸ் நிலையத்துக்கு மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பல அரசியல் பிரமுகர்களால் நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், சிங்கபூரில் இருந்து எந்தவிதமான இரசாயன கழிவுகளையும் இலங்கைக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. எனவே அவ்வாறு தெரிவிக்கப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.

தான் மின்சக்தி அமைச்சராக செயற்பட்ட காலத்தில் மலையக தோட்ட பகுதிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவு மின்சார வசதியை வழங்கியுள்ளேன். தற்போது தொழினுட்ப உலகத்தில் வாழும் நமக்கு அனைத்து தேவைகளையும் ஸ்மாட் கைதொலைபேசியூடாக செய்துக்கொள்ள கூடிய ஆளுமை உள்ளது.

அதற்கமைவாக பல்கலைக்கழகங்களிலும் புதியவகை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளோம். குறிப்பாக வங்கித்துறை தற்போது நவீனமாக்கப்பட்டுள்ளதுடன், வாடகைக்கு வாகனங்களை பெறுவதற்கும் இணையத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஊடகங்களும் இந்த புதிய முறைமைக்கு மாறியுள்ளன. அதாவது செய்திகளை முகப்புத்தகத்தில் வெளியிடும் அளவுக்கு தொழினுட்பம் முன்னேறியுள்ளது.

எனவே, அதற்கேற்றால் போல் எமது தேயிலை துறை, ஆடை தொழிற்துறை போன்ற துறைகளை அபிவிருத்தியடைய செய்ய வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் இந்த உலகத்தின் எதிர்காலம் எமது பிள்ளைகளில் கைகளிலே உள்ளது.

அதேபோல் இன்றைய உலகில் பேஸ்புக், அப்பள், கூகுள், போன்ற இணைய வர்த்தக துறைகளே, பாரிய இலாபமீட்டி பாரிய வளர்ச்சியை கண்டுள்ளன.

ஆகவே இந்த புதிய தொழினுட்ப புரட்சியோடு முன்னோக்கி பயணிக்கவே எமது பிள்ளைகள் ஆயத்தப்பட வேண்டும், தற்போது எமது நாட்டில் நகரமயமாக்கலே பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு வாகன அதிகரிப்பே முழு காரணம், சுதந்திரம் பெறும் போது ஐயாயிரம் வாகனங்களே இருந்தன. ஆனால் இன்று 75 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன.

கொழும்பில் தற்போது 15 வீதமான காணிகள் போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பஸ் மற்றும் ரயில் போக்குவரத்துக்களுக்கு முக்கியதுவமளித்து செயற்பட வேண்டியுள்ளது.

எனவே எதிர்கால சந்ததியினருக்கு அரச போக்குவரத்தே அவசியப்பட போகின்றதே அன்றி தனியார் போக்குவரத்து பயனளிக்க போவதில்லை. எனவே புதிய தொழினுட்ப உலகத்திற்கு முகம் கொடுக்க எமது பிள்ளைகள் தயாராக வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

(Champika said no truth waste worn Singapore brought Sri Lanka)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites