கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.Rahman dontes Rs1 Crore Kerala flood fund
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
கடந்த மாதம் கேரளாவில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளத்தால், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு நிவாரண முகாமகளில் தங்கி வந்தனர்.
தமிழக அரசு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் கேரள மாநில மழை வெள்ள பாதிப்புக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஓர்லான்டோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று இசை விழாக்களை நடத்தி வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அதன்மூலம் கிடைத்த பணத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஹ்மான்.. :-
“அமெரிக்காவில் இசை கச்சேரி நடத்திவரும் என் சக கலைஞர்களும் நானும் சேர்ந்து கேரள மக்களுக்கு செய்யும் சிறு உதவி. இதன்மூலம் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பும் 1 கோடி ரூபாய்க்கான காசோலையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
ரஹ்மானின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!
* விஷாலுக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் : காரணம் தெரியாமல் புலம்பும் ரசிகர்கள்..!
* காதலியைப் பார்ப்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு ஓடிய டேனியல்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* சீமராஜா ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பு..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!