விக்னேஸ்வரனின் மனக் குழப்பத்தை தீர்த்த பின்பே கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் – சுமந்திரன்!!

0
303
Wigneswaran's mental turmoil Federation position Sumanthiran

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது மனக் குழப்பத்தைச் சீர் செய்த பின்னர் அரசியல் தெரிவுகளை முன்வைக்க வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். Wigneswaran’s mental turmoil Federation position Sumanthiran

வடக்கு மாகாண முதலமைச்சர் தனக்கு முன்பாக 4 தெரிவுகள் இருப்பதாக கூறியுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம், பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாண சபைத் தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் கடந்த பொதுத் தேர்தலில் வீட்டுக்கு வெளியே வந்து வாக்களியுங்கள் என்று கூறினார். இப்படி நடந்து கொள்பவர்கள் கட்சிக்கு எப்படித் தகுதியானவர்கள்?

ஆகவே நாட்கள் செல்ல.. செல்ல.. தெரிவுகளின் எண்ணிக்கை உயரும் வாய்ப்புக்கள் உள்ளது. அவருடைய மனக்குழப்பங்களுக்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல. அவர் தனது மனக்குழப்பம் தெளிந்து, தெளிவான ஒரு தெரிவினை கூறியதன் பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றார்.

tags :- Wigneswaran’s mental turmoil Federation position Sumanthiran

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை