கினிகத்தேனை நகரில் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட நவீன முறையிலான புதிய பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. foundation ceremony modern bus stand Ginichettan
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பல அரசியல் பிரமுகர்களால் காலை 10.00 மணியளவில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
மிக நீண்டகாலமாக கினிகத்தேனை நகரில் பேருந்து தரிப்பு நிலையம் ஒன்று முறையாக இல்லாமல் இருந்தமை வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்தவகையில் நகரின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் முகமாக இப்பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்படும் நவீன பேருந்து தரிப்பு நிலையத்தின் மேல் மாடியில் கடைத்தொகுதிகள் மற்றும் காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதன்போது, மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, அம்பகமுவ பிரதேச சபை தலைவர், உள்ளிட்ட அரச அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
tags :- foundation ceremony modern bus stand Ginichettan
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :