மன்னார் கடலில் மிதந்து வந்த வெடிபொருள்- ஒருவர் பலி, மூவர் காயம்!!

0
360
explosion Mannar Sea one killed three injured

வெடிபொருள் வெடித்ததில் மீனவர் ஒருவர் மன்னார் பள்ளிமுனையில் உயிரிழந்துள்ளார். மூன்று பேர் காயமடைந்துள்ளனர். explosion Mannar Sea one killed three injured

பள்ளிமுனை கடற்பரப்பில் மிதந்து வந்த வெடிபொருளை எடுத்துச் சோதனைக்கு உட்படுத்தியபோது இந்த இடர் நேர்ந்துள்ளதாக விசாரணைகளின் போது மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மீனவர்களால் தெரிவிக்கப்பட்டதாவது,
மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். பள்ளிமுனை – நாச்சிக்குடா கடற்பகுதியில் மிதந்து வந்த வெடிபொருளை மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

ஜேசு ரஞ்சித் (வயது-39) என்ற மீனவர் அதனை எடுத்து படகினுள் வைத்துச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். வெடிபொருள் வெடித்ததில் அவர் உயிரிழந்தார். உடலின் பல பகுதிகள் சிதறியுள்ளது.

படகிலிருந்த ஏ.ஏ.சித்தி பிகிராடோ (வயது-35), எம்.அகஸ்ரின் பிகிராடோ(வயது-26) ஆகிய இரு மீனவர்களும் படுகாயமடைந்தனர். அந்தோனி பிகிராடோ (வயது-39) என்பவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினார்.

சடலம் உடனடியாக மன்னார் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் மன்னார் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- explosion Mannar Sea one killed three injured

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :