‘ஜானி’ இது ஆக்‌ஷன் திரில்லர் படம் – பிரசாந்த்

0
480
Johnny Tamil Thriller Movie Prashanth, Johnny Tamil Thriller Movie, Johnny Tamil Thriller, Johnny Tamil Movie Prashanth, Prashanth, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News, new tamil movie news, tamil movie news

தியாகராஜன் எழுதி, தயாரித்துள்ள படம் ஜானி. வெற்றி செல்வன் இயக்கத்தில், பிரசாந்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரபு, சாயாஜி ஷிண்டே, அஷுதோஷ் ராணா, ஆனந்தராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.Johnny Tamil Thriller Movie Prashanth

இப்படம் பற்றி பிரசாந்த் கூறிய போது, இது ஆக்‌ஷன் திரில்லர் படம். டீசர் வெளி வந்து 5 மணி நேரத்தில் 1.5 லட்சம் பேர் பார் பார்வையிட்டுள்ளனர். மணிரத்னம் சார் டீசரை வெளியிட்டார். அவருடன் அப்பாவுக்கும் எனக்கும் நீண்ட நாள் நட்பு இருக்கிறது.

இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க அவருக்கு ஆர்வம் கிடையாது. ஆனால் நாங்கள் கேட்டதும் ஒப்புக்கொண்டார்.

பணத்திற்கு பின்னால் ஒரு கூட்டம் ஓட, அதை சுற்றி நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள். அது கள்ள நோட்டு கும்பலா, வங்கியில் கொள்ளையடிக்கும் சம்பவமா, கொள்ளை கும்பலா போன்ற சிந்தனைகளை ரசிகர்களின் கணிப்புக்கே விட்டு விட்டோம். ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர்ந்திருக்க வைத்திருக்கும் விதமாக திரைக்கதையை அப்பா எழுதியிருக்கிறார்.

எல்லா கேரக்டர்களுக்குமே கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனது ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் தொடர்பே இருக்காது.

இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. கிராபிக்ஸ் காட்சிகள் உண்டு; அதை நானே கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்திருக்கிறேன். இவ்வாறு பிரசாந்த் கூறினார்.

Tag: Johnny Tamil Thriller Movie Prashanth

எமது ஏனைய தளங்கள்