“ஒரு அடார் லவ்” மலையாள படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் மூலம் கண்ணடித்து ஒரே நாளில் ஒஹோ ஹீரோயின் ஆனார் பிரியா பிரகாஷ் வாரியர். இந்தக்காட்சி இணையத் தளம் மூலம் வைரலாகி பல மாதங்கள் ஆகியும் சில பிரச்சினைகள் காரணமாக அப்படம் திரைக்கு வரவில்லை.Priya Varrier latest news Tollywood Cinema News
இதனால் நொந்துபோன பிரியா வாரியர் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக கண்ணடித்த காட்சியில் நடித்தபோது இடம்பெற்ற ஒரு பாடலால் சர்ச்சையில் சிக்கினார் பிரியா வாரியர்.
இந்நிலையில் தற்போது மற்றொரு சர்ச்சையில் அவர் சிக்கியிருக்கிறார். சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பல நடிகர், நடிகைகள் நிதியுதவி அறிவித்து வருகின்றனர். நடிகை பிரியா வாரியரும் தனது பங்குக்கு ரூ 1 லட்சம் கேரளா முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார்.
அதன்பின்னர் அதற்கான ரசீதை தனது இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் வெளியிட்டு, ”இந்த ரசீதை நான் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்கு காரணம் பப்ளிசிட்டிக்காகவோ அல்லது நானும் நன்கொடை அளித்தேன் என்பதை வெளிப்படுத்துவற்காகவோ அல்ல..!
இதைப்பார்த்து மற்றவர்களும் வெள்ள நிவாரணத்துக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே. இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தால் என்னை தாழ்வாக விமர்சிக்காதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பிரியா வாரியரின் இந்த செயலை பலர் ரசிக்கவில்லை. பப்ளிசிட்டிக்காக இன்ஸ்டாகிராமில் ரசீதை வெளியிடவில்லை என்று சொன்னால் பிறகு ஏன் அதை வெளியிட்டீர்கள் என கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!
* பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!