பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!

0
114
Prabhu deva new movie title announced

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம், பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் இயக்குனராக அறிமுகமாகிறார். “தேள்” என்று பெயரிடப்பட்டுள்ள இப் படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார்.Prabhu deva new movie title announced

“எங்கேயும் எப்போதும்”, “நெடுஞ்சாலை” உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இப் படத்துக்கு இசையமைக்கிறார். “காட்டேரி” படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் எடிட்டிங் செய்கிறார்.

இவர்களுடன், கலை இயக்குனராக செந்தில் ராகவன் மற்றும் சண்டைப்பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோர் பணி புரிகிறார்கள். பொன் பார்த்திபன் மற்றும் ஹரி குமார் இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா கூறுகையில்.. :-

“ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குனர் ஒரு படத்தில் இயக்குவது வெறும் யதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நான் நடனம் என்பது உணர்வுகளின் ஒரு முக்கியமான பிரிவு என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். நடனத்தில் அனுபவமிக்க இந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் எமோஷன் கலந்த ஒரு ஆக்‌ஷன் படத்தை கொடுக்க இருக்கிறார்கள்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த ஜானரில் படத்தை எடுக்க உண்மையாக உழைக்கும். “தேள்” நிச்சயமாக எங்கள் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்திருக்கிறோம்.

கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது” என்று பெருமையுடன் கூறுகிறார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் : பிரபல நடிகையின் அதிர்ச்சிப் பேட்டி..!

இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!

கபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..!

ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!

என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!

கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!

Tags :-Prabhu deva new movie title announced