வவுனியாவில் போலி நாணயத் தாள்கள் வைத்திருந்த நபர் கைது

0
355
Person arrested fake currency notes Vavuniya

வவுனியாவில் போலி நாணயத் தாள்களை வியாபர நிலையத்திற்கு கொடுத்த நபரொருவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். (Person arrested fake currency notes Vavuniya)

வேப்பங்குளம், பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிலுக்கான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்துவிட்டு, 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த 5 ஆயிரம் ரூபாவில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாளை வைத்திருந்த 24 வயதுடைய நபரைக் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Person arrested fake currency notes Vavuniya