அடுத்த வார எவிக்சன் லிஸ்ட்டில் யாஷிகா ஐஸ்வர்யா இல்லை…காப்பாற்றிய பிக்பாஸ்!

0
326
Bigg boss house captain againn Yashika gossip

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் யாஷிகாவை தலைவியாக்கி பார்வையாளர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டில் இதுவரை பல வாரங்கள் கடந்து சென்றும் ஒரு சிலரை தவிர முக்கியமாக மும்தாஜ், ரித்விகா, டானியல் போன்றோர் இதுவரை தலைவராக இருக்கவில்லை. தலைவராக யாஷிகாவும், ஐஸ்வர்யாவுமே அடிக்கடி இருந்து வருகின்றனர். அந்த வகையில் யாஷிகா மூன்றாவது முறையாக தலைவியாகி உள்ளார். Bigg boss house captain againn Yashika gossip

இப்போது உள்ள போட்டியாளர்களில் பார்வையாளர்களின் அதிக வெறுப்பை சம்பாதித்திருப்பவர் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாதான். எனவே அவர்கள் எவிக்சனில் சிக்கினால் அவரை வெளியேற்ற அனைவரும் காத்திருக்கின்றனர்.

தலைவருக்கான போட்டியில் இந்த முறை யாஷிகா அதிக பந்துகளை பொறுக்கினார் என்ற காரணத்தால் மீண்டும் அவரை பிக்பாஸ் வீட்டின் தலைவியாக்கியுள்ளார். இதனால் யாஷிகாவை எவிக்சனிலிருந்து காப்பாற்றியுள்ளார். இனி யாஷிகாவுக்கு ஏதாவது சலுகை கொடுத்து ஐஸ்வர்யாவையும் அவர் காப்பாற்றுவது உறுதிதான்.

இதற்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை இத்துடன் முடித்துவிட்டு ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் வெற்றி பெற்றுள்ளனர் என்று அறிவித்துவிடுவது நல்லது என்பது நெட்டிசன்கள் கருத்து.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் இல்லத்தில் காதலியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட டானியல்…!
இந்த நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது- பிரபல நடிகரை பார்த்து கூறிய நடிகை!