பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்படவுள்ள ”மகாபாரதம்” படத்தில் நடிக்க, ”பாகுபலி” பிரபாஸின் பெயரை இந்தி நடிகர் அமீர் கான் பரிந்துரை செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.Aamir khan Prabhas play major role Mahabharata
தற்போது வரலாற்றுக் கதைகளைப் படமாக்க திரையுலகம் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவின் பிரதான மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வரலாற்றுப் படங்கள் தயாராகி வருகின்றன.
அதன்படி, இந்தியில் மகாபாரதத்தைப் படமாக்க உள்ளதாகவும், அதில் அமீர் கான் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் எனவும், ஏற்கனவே செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால், அமீர் கான் இதுகுறித்து எதுவும் கூறவில்லை.
மேலும் அவர் அதற்கு மாறாக, ”தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்” படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையே, மீண்டும் ”மகாபாரதம்” படம் தொடங்க உள்ளதாக பாலிவுட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதில், ரூ.1,000 கோடி செலவில் மகாபாரதத்தைப் படமாக்க முகேஷ் அம்பானியின் நிறுவனம் முன்வந்துள்ளது. கிருஷ்ணன் அல்லது கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவந்த அமீர் கானுக்கு, தற்போது கிருஷ்ணன் வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. திரௌபதி வேடத்தில் தீபிகா படுகோன் நடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இப் படத்தில், அர்ஜுனன் கதாபாத்திரத்தில் ”பாகுபலி” பிரபாஸ் நடிக்க வேண்டுமென அமீர் கான் பரிந்துரைத்துள்ளார் எனவும், மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..!
* பிரபுதேவாவின் புதிய பட டைட்டில் அறிவிப்பு..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* காய்கறி விற்று நிதி திரட்டிய நடிகை சமந்தா : காரணம் இது தானாம்..!
* என்.ஜி.கே படத்தின் ரிலீஸ் திகதி தள்ளிவைப்பு : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* கர்ப்பமான சென்றாயன் மனைவிக்கு மும்தாஜ் கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்..!