ஐ.எஸ்.எஸ் : அவுஸ்திரேலியாவை அதிரவைத்துள்ள இலங்கையரான மொஹமட் நிசாம்டீன்

0
517
Sri Lankan Arrested Australia ISIS

தீவிரவாத குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் வெளியிட்டுள்ளன. Sri Lankan Arrested Australia ISIS

25 வயதான மொஹமட் நிசாம்டீன் என்ற இளைஞரே அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பிணைக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவருடைய மாணவர் விசா செப்டம்பர் மாதம் காலாவதியாக உள்ளதாகவும், இதனை நீட்டிப்பதற்கு அவர் எதிர்ப்பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தாக்குதல்களுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணம் ஒன்று அவரிடம் இருந்துள்ளதாகவும் அந்த இளைஞர் மீது அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

எந்த இடத்தில் தாக்குதல் நடத்த வேண்டும், யாரை இலக்குவைக்க வேண்டும் என்ற பல தகவல்களை அவர் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சந்தேகநபர் பல்கலைக்கழகத்தில் கட்டட ஒப்பந்தக்காரராகவும் பணியாற்றியுள்ளார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

.