மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்

0
617
Person injured shooting Maligawatte

கொழும்பு – மாளிகாவத்தைப் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Person injured shooting Maligawatte)

மாளிகாவத்த பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் சந்தியிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரியே குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 31 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Person injured shooting Maligawatte