இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்துவரும் “என்.ஜி.கே” திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் என்று கூறப்பட்டது.NGK movie release date postponed
இப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பும் முடிந்துவிட்டதால், தீபாவளி அன்று இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த வேளை, சற்றுமுன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி ”என்.ஜி.கே” படக்குழுவினர் இந்த படத்தை முடிக்க இரவுபகலாக உழைத்து வருகின்றனர். சூர்யாவின் ரசிகர்களை திருப்தி செய்ய அதிகபட்ச உழைப்பை படக்குழுவினர் கொடுத்து வந்த போதிலும், இந்த படம் வரும் தீபாவளிக்கு பின்னரே ரிலீஸ் செய்ய வாய்ப்பு உள்ளது.
அத்துடன், ரிலீஸ் திகதியை இன்னும் ஒருசில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் சூர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும், வரும் தீபாவளி அன்று விஜய்யின் ”சர்கார்” மட்டுமே வெளியாக வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!
* கபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!
* ராஷிகண்ணாவுடன் டூயட் பாடத் தயாரான விஷால்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!