பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி

0
450
Arumugan Thondaman resigned

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். (Arumugan Thondaman resigned)

இதுவரை காலமும் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான் இன்று முதல் தலைவராக மட்டும் செயற்படவுள்ள அதேவேளை, பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுகூடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

காங்கிரஸின் பொது செயலாளரும், தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடிய தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான், இன்றில் இருந்து தலைவராக மட்டும் செயற்படவுள்ளார்.

அத்தோடு, பொதுச் செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Arumugan Thondaman resigned