நானுஓயா டெஸ்போட் பகுதியில் தீ: கடை முற்றாக எரிந்து சாம்பல்

0
849
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/wp-content/uploads/2018/08/fire-broke-shop-NanuOya-1.jpg

நானுஓயா டெஸ்போட் பகுதியில் உள்ள சில்லறை கடையொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். (fire broke shop NanuOya)

இந்த தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நானுஓயா பொலிஸார், நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு படையினர், மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3 மணித்தியாலயங்களுக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உறவினர்கள் கடையில் இல்லாத போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கடையில் சமையல் எரிவாயு (கேஸ் சிலின்டர்) இருந்ததனால் இந்தத் தீ பரவலாக பரவியுள்ளதோடு, தீ விபத்தினால் அப்பகுதிக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; fire broke shop NanuOya