விளையாட்டுத் துறையில் ஈடுபட்டுள்ள ஆற்றல் மிகுந்த மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக வீர வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில் விளையாட்டுத் துறைக்கான பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பாடசாலைகளில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு போதுமான போசாக்கை வழங்கும் நோக்கில் ஒரு மாணவருக்காக வழங்கப்படும் மாதாந்த போசாக்குக்கான கொடுப்பனவு 2500 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)