தேசிய அடையாள அட்டைகள் கட்டணத்தில் திருத்தம்

0
747
revision National Identity Card Fee

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. (revision National Identity Card Fee)

இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 ஆவது வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பத்திற்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளது.

தேசிய அடையாள அட்டையொன்றின் திருத்திய இணைப்பிரதி ஒன்றை வழங்குவதற்காக 250 ரூபா அறவிடப்படவுள்ளது.

காணாமல் போன தேசிய அடையாள அட்டையின் இணைப் பிரதியொன்றை வழங்குவதற்காக 500 ரூபாவும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 2018 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த கட்டணங்களை வறுமை காரணமாக செலுத்த முடியாதவர்கள் பிரதேச செயலாளரிடம் இருந்து பெறப்பட்ட கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுவிக்கும் உரிய சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; revision National Identity Card Fee