மகளின் சடலத்தை பார்த்த தாய் மாரடைப்பில் மரணம்; குருநாகலில் சம்பவம்

0
720
Mother dies heart attack

குருநாகல் மெல்சிறிபுர, போகஹபிட்டிய பிரதேசத்தில் மகளின் திடீர் மரணத்தைக் கேட்டு, இளம் தாயொருவர் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. (Mother dies heart attack)

குறித்த தாயின் 14 வயதுடைய மகள் நேத்மி நிஷாதி பெரேரா நீண்ட காலமாக நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

குறித்த தாய் மகளின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில், மகளின் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் கடந்த 25 ஆம் திகதி சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மகளின் சடலத்தை பார்வையுற்ற பின்னர், திடீரென மயக்கமுற்று விழுந்த குறித்த தாயை வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ள போதிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு காரணமாகவே குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் எந்தவித நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் அவருக்கு மகளின் இறப்பு அதிர்ச்சியை அளித்துள்ளதால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

34 வயதுடைய அனுஸா தமயந்தி குமாரி என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தாய் மற்றும் மகளின் சடலம் இன்று மெல்சிறிபுரயில் உள்ள பொது மயானத்தில் ஒரே குழிக்குள் புதைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mother dies heart attack