பிறந்த குழந்தை காயங்களுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

0
755
birth child takeover polise wall

{ birth child takeover polise wall }
அநுராதபுரம், கோலிபெந்தேவ பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சொந்தமான கிணற்றில் இருந்து குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (27) வீட்டில் உள்ளவர்கள் கிணற்றில் துர்நாற்றம் வீசுவதை அடுத்து, கிணற்றை சோதனையிட்ட போதே குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த குழந்தை ஒன்றின் சடலத்தை இனந்தெரியாத நபர் ஒருவர் இவ்வாறு கிணற்றில் போட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலத்தில் இரத்த காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில், பரசன்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags; birth child takeover polise wall

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை]

Tamil News Group websites