கள்ளக் காதலனால் 46 வயது பெண் அடித்துக் கொலை

0
673
46 year old girl kills

குருநாகல் வாரியபொல பகுதியில் 29 வயதான நபர் ஒருவர், 46 வயதான பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளார். (46 year old girl kills wariyapola kurunegala)

ஏற்கனவே திருமணமான பெண்ணை, குறித்த இளைஞன் இரும்புக் கம்பியொன்றினால் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளார்.

பீ.எச்.சியாமலி பதிராஜ் என்ற 46 வயதான தாதியான பெண் ஒருவரே இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த குறித்த பெண் குருநாகல் போதான வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில், கணவரை பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெண் 29 வயதான இளைஞருடன் வாரியபொல பிரதேசத்தில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த இளைஞன் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்போது சட்டபூர்வமான கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 46 year old girl kills wariyapola kurunegala