கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் தடம்புரண்டதில் இளைஞன் பலி

0
737
23 year old youth kills Kilinochchi

கிளிநொச்சி ஊரியான் பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் அப்பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். (23 year old youth kills Kilinochchi)

இந்தச் சம்பவத்தில் 23 வயதான சியாந் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்றவேளை ஆறு ஒன்றில் உழவு இயந்திரத்தை இறங்கிய பின்னர் மேல் ஏறிய போது தடம் புரண்டதில் உழவு இயந்திர சாரதியான குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவரை அனுமதித்த போதும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 23 year old youth kills Kilinochchi