மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பலியான இளம் பெண்!

0
503
9 year old boy killed road accident Kinniya Police Trincomalee

(woman died riding bike Balakuda junction Kalpitiya Puttalam)

கல்பிட்டி – புத்தளம் பிரதான வீதியின் பாலக்குடா சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடம் மோதுண்ட பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பாலக்குடா பகுதியை சேர்ந்த 33 வயதான பெண் ஒருவரே இன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்ததாக கல்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து பேருந்து ஒன்றின் சாரதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை கைது செய்யதுள்ளனர்.

விபத்து தொடர்பில் கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(woman died riding bike Balakuda junction Kalpitiya Puttalam)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites