மகிந்த அணியிலிருந்து அரசுடன் இணைய 10 பேர் மந்திராலோசனை?

0
416
ten general opposition member joint government

(ten general opposition member joint government)

அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் போது அரசாங்கத்தை கலைக்க செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கனவு கண்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் கூட்டு எதிரணியிலிருந்து பத்து பேர் அரசாங்கத்துடன் இணைவதற்கான இரகசிய மந்திராலோசனையில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத்திட்டத்தின் போது ஆட்சியை கவிழ்க்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார்.

இது போன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆட்சியை கவிழ்ப்பதாக பல தடவை கூறி வந்த போதிலும் எந்த ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளும் இடம்பெறவில்லை.

ஆட்சியை கவிழ்ப்பதாக பல தடவை கூறியும் மஹிந்த ராஜபக்ஷவினால் ஆட்சி கவிழ்ப்பு கனவாகவே மாறியுள்ளது. இனிமேலும் இந்த அரசாங்கத்தை அசைக்கவே முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

(ten general opposition member joint government)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites