
{ Successful surgical match body organs }
உடல் உறுப்புக்களைப் பொருத்தும் சத்திர சிகிச்சை தற்போது வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
30ற்கும் மேற்பட்டோருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஈரலைப் பொருத்தும் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விசேட வைத்தியர் றுவன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையிலும் அண்மையில் இந்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக விசேட வைத்தியர் பி.கே.ஹரிஷ்சந்திர தெரிவித்தார்.
இந்த சத்திர சிகிச்சையை வெளிநாட்டில் மேற்கொள்வதாயின் கோடிக்கணக்கான பணத்தை செலவிட வேண்டும் என்றும் இரத்த நாள சத்திர சிகிச்சை தொடர்பான விசேடவைத்தியர் ஷரித்த வீரசிங்க குறிப்பிட்டார்.
சத்திர சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்லும் பெரும் தொகை பணத்தை நாட்டில் சேமிக்கக்கூடியதாக உள்ளது என்றும் இரத்த நாள சத்திர சிகிச்சை தொடர்பான விசேடவைத்தியர் ஷரித்த வீரசிங்க மேலும் கூறினார்.
Tags: Successful surgical match body organs
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வியட்னாமில் இன்று ரணில் பங்கேற்கும் இந்து சமுத்திர மாநாடு!
- கணவரை மருத்துவமனையில் அனுமதித்த சில நொடியில் கணவருடன் இவ்வுலகை விட்டு பிரிந்த மனைவி!
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கோட்டா உள்ளிட்ட 07 பேருக்கு அழைப்பாணை!
- ஞானசாரவுக்கு பொதுமன்னிப்பு?
- நில மீட்புப் போராட்டத்துக்கு மாவை அழைப்பு!
- குடும்ப விபர அறிக்கை பெறும் நடவடிக்கை இரத்து?