ஒப்பரேஷன் ரிவிரெச : முன்னாள் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொஹான் தளுவத்த காலமானார்!

0
532
rohan thalivatta passed away

rohan thalivatta passed away }
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ரொஹான் தளுவத்த தனது 77 வயதில் இன்று காலமானார்.

அம்பலாங்கொடையில் பிறந்த இவர் 1961 ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்தார்.

1996 ஆம் ஆண்டு இலங்கையின் 13 இராணுவ தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், இவர் பிரேசிலிற்கான இலங்கை தூதுவராகவும் கடமையாற்றினார்.

இலங்கை இராணுவ வரலாற்றில் விடுதலைப் புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படும் ‘ரிவிரெச’ இவரது தலமையிலேயே முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சூரியக் கதிர் நடவடிக்கை அல்லது ரிவிரெச எனப்படும் இராணுவ நடவடிக்கை இலங்கையின் முப்படைகளும் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையாகும்.

அக்டோபர் 17 1995 ஆம் நாள் தொடங்கப்பட்ட ரிவிரெச நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக புலிகள் வசமிருநத யாழ் நகரையும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றுவது அமைந்திருந்தது.

1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ் நகர் இராணுவ வசப்பட்டதை தொடர்ந்து ரிவிரெச நடவடிக்கை முடிவுற்றது.

Tags: rohan thalivatta passed away

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites