புகையிரத பணியாளர்களின் பணிநிறுத்தம் இரத்து

0
403
Railway Trade Unions called off planned strike August 29

(Railway Trade Unions called off planned strike August 29)

புகையிரத பணியாளர்கள் நாளை மறுதினம் (29) ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானித்திருந்த பணிநிறுத்த போராட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியுடன் இன்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே, சம்பள உயர்வைக் கோரி கடந்த வாரமளவில் போராட்டத்தில் ஈடுபட்ட புகையிரத பணியாளர்களுக்கு நியாயமான கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதற்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில், மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக புகையிரத பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

(Railway Trade Unions called off planned strike August 29)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites