நில மீட்புப் போராட்டத்துக்கு மாவை அழைப்பு!

0
852
Mawai Calls for Protest

எதிர்வரும் 28 ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெறவுள்ள முல்லை நிலங்களும் கடல் வளங்களும் மீட்புப் போராட்ட த்திற்கு அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார் Mawai Calls for Protest

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

முல்லைத்தீவு தமிழ் மக்கள் பொது அமைப்புக்கள் அணிதிரண்டு 28 ஆம் திகதியன்று முல்லை நிலங்கள் மற்றும் கடல் வளங்கள் காலா காலமாக ஆக்கிரமிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் வருங் கொடுமைகளுக்கெதிராக முல்லை மாவட்ட செயலகத்தின் முன்றலில் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்துவதற்கு அறிவித்துள்ளன.

போர்க்காலத்திலும் போரின் பின்னரும் இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் வேளாண்மை நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளது. மறுபுறம் அரசின் இராணுவத்தின் அனுசரனையடன் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியேறுகின்றனர்.

ஒரு புறம் கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பாவித்து ஆழ்கடல் வரை மீன் வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன. மீன் வளம் அழிகின்றது. தமிழ் மீனவர் வாழ்வாதாரம், வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. தென்னிலங்கை மீனவர் செல்வம் கொழிக்கிறது. தமிழ் மீனவர் வறுமையில் வாடுகின்றனர்.

அதே போல தமிழ் மக்கள் வளமான வேளாண் நிலங்களும் குடியிருப்பு நிலங்களும் இராணுவத்தினாலும் தென்னிலங்கைச் சிங்களவர் ஆக்கிரமிப்பினால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் தமிழர் நிலம் சிங்களவர் நிலமாகின்றது. தமிழினத்தின் இன அடையாளம் அழிக்கப்படுகிறது.

தமிழர் பிரதேசத்தின் குடிப்பரம்பல் குலைக்கப்பட்டு எதிரிகளாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டும் அழிக்கப்பட்டும் சிங்கள மயமாக்கப்பட்டு வரும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. தமிழர் வாழ்வும் இன அடையாளமும் அழிக்கப்படுகிறது.

தற்போது மகாவலி நீர் பாச்சல் திட்டத்தினுல் தமிழர் நிலங்களில் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் குடியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மகாவலி வலயப் பிரகடனங்கள் நீர் பாசனத்திறகே மட்டுப்படுத்தப்பட வேண்டும் சிங்கள குடிப்பரம்பலை, குடியேற்றத்தை கட்டியெழுப்புவதற்கு அல்ல. இத்தகைய அபாயத்தை தடுத்து நிறுத்தவும் தமிழ் மக்களையும், தமிழர் நிலங்களையும் பாதுகாக்கவும் திட்டமிட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

காணி அதிகாரம், மகாவலி நீர் பாய்ச்சல் திட்டம் மற்றும் குடியேற்ற அதிகாரம் தமிழர் பிரதேசத்தில் தமிழ் மக்களிடம் இருக்க வேண்டும். அல்லது தமிழர் அரசியல் பலமும் அதிகாரமும் சிதைக்கப்பட்டுவிடும். மேலும் தமிழர் பிரதேசங்களில் 1. வனப் பிரதேசம் , 2. வன விலங்கு வாழ் பிரதேசம் , 3. தொல்லியல் பாதுகாப்புப் பிரதேசம் , 4. இராணுவ உயர் பாதுகாப்புப் பிரதேசம் , 5. கடலோரப் பாதுகாப்புப் பிரதேசம் அதை விட புதிய பௌத்த சிலைகள், விகாரைகள் வளாகங்கள் புனித பிரதேசங்கள் எனும் பிரகடணங்களால் தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் தமிழர் இனம், தமிழர் நிலம், தமிழர் குடியிருப்புக்கள், சமூக பொருளாதார கட்டமைப்புக்கள் அடக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும், ஒழிப்புக்கும் ஆளாகின்றன.

இத்தகைய தமிழ் இன அடக்குமுறை ஒடுக்குமுறை அழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி தமிழினத்தையும், தமிழ் நிலத்தையும், தமிழர் சமூக பொருளாதார கட்டமைப்பையும், தமிழர் வாழ்வுரிமையையும் பாதுகாத்துப் பேண வேண்டும் எனும் அவசிய தேவையை உணர்தியது இத்தகைய அமைதிவளிப் போராட்டங்கள், விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்படுவது காலத்தேவையாகும்.

இந் நோக்கில் அணி திரளும் மக்கள் எவ்வகையிலும் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் கண்ணும் கருத்துமாய் தமிழர் அலங்கை இலட்சிய தாகத்தை மேம்படுத்தி நிற்கவேண்டும் எனவும் கேட்டு நிற்கின்றோம். Mawai Calls for Protest , Mawai Calls for Protest News