ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கு – இன்று வெளியாகிறது தீர்ப்பு

0
636
india tamil news hyderabad twin blasts case - pronounced today

ஹைதராபாத்தில், கடந்த 2007-ம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்பு வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது ஹைதராபாத் நீதிமன்றம்.india tamil news hyderabad twin blasts case – pronounced today

ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான கோகுல் சாட் உணவகத்தில், கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி, பயங்கரவாதிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், 32 அப்பாவி பொதுமக்கள் உடல்சிதறி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, அடுத்த 5 நிமிடத்திலேயே ஹைதராபாத் தலைமைச்செயலகம் அருகேயுள்ள, லும்பினி பார்க் திறந்தவெளித் திரையரங்கத்தில் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரட்டை குண்டு வெடிப்பால், 52-க்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் கை, கால்களை இழந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த, ஷாஃபிக் சையத், முகமது ஷாதிக், அன்சார் அகமது, அக்பர் இஸ்மாயில், உள்ளிட்டோரை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கடந்த 2008-ம் ஆண்டு கைதுசெய்தனர்.

இதையடுத்து, அவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செர்லப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை, ஹைதராபாத் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. வழக்கு தொடர்பாக 170 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்ததையடுத்து, இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :