தனியாக பயணிப்பது பற்றி தீர்மானிக்கவில்லை – சி.வி

0
299
Certainly about traveling alone CV

தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் தானும், சுரேஸ் பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில தரப்புக்களிடையே ஒற்றுமைகள் காணப்படுவதாக வட மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Certainly about traveling alone CV

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

நான் வடமாகாண மக்களுடன் இருப்பதாக உறுதியளித்துள்ளேன். அவர்கள் என்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அவர்களின் அபிலாஷைகளுக்கு காத்திரமான பணியை ஆற்றவேண்டிய கடமை உள்ளதை உணர்கின்றேன். தனியாக பயணிப்பது பற்றி தீர்மானிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் கொள்கை, அரசியல் தீர்வு, அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் அண்மைக்காலமாக சீர்தூக்கிப் பார்த்து ஆராய்ந்து வருகின்றேன்.

தமிழ் மக்கள் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரமே எமது மக்கள் வடக்கு மாகாண சபையில் ஆணையை வழங்கியுள்ளார்கள். அவர்கள் வழங்கிய அடிப்படைக்கொள்கையின் பிரகாரம் பார்க்கின்றபோது எனக்கும், சுரேஸ் பிரேமசந்திரனுக்கும், கஜேந்திரகுமாருக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் எவையும் இருப்பதாக நான் உணரவில்லை. ஏறக்குறைய ஒரேகொள்கையில் தான் இருக்கின்றோம் என்றே கருதுகின்றேன் என்றார்.

tags :- Certainly about traveling alone CV

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites