சிறையில் மல்லையாவிற்கு வழங்கப்பட உள்ள வசதிகள் குறித்து மத்திய அரசு விளக்கம்!

0
485
Central Government explanation facilities

{ Central Government explanation facilities }
வங்கியில் கடன்வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பிரபல தொழிலபதிபர் விஜய் மல்லையாவுக்கு, மும்பை ஆர்தர் சாலை சிறையில் வழங்கப்பட உள்ள வசதிகள் குறித்து, லண்டன் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து, லண்டன் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. நாடு கடத்தப்பட்டால், மும்பை ஆர்த்தர் ரோடு சிறையில் மல்லையா அடைக்கப்படுவார் என மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், சிறையில் போதிய வசதிகள் இல்லை என மல்லையா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறையில் உள்ள வசதிகள் குறித்த எட்டு நிமிட வீடியோவை மத்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை அடுத்தமாதம் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags: Central Government explanation facilities

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :