24 மணிநேரத்துக்குள் தமிழகத்திற்கு பலத்த மலை பெய்யும்!

0
541
24 hour strong rainTamil Nadu

{ 24 hour strong rainTamil Nadu }
மேற்கு வங்காளம், வடக்கு ஒடிசா கடற்கரை மற்றும் அதையொட்டிள்ள வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மேலும் தெற்கு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரம் அடையும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். 29-ந்தேதிவரை 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங் குளத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

செங்கல்பட்டு, தாமரைப்பாக்கம், விளாத்திக் குளத்தில் 4 செ.மீ., விரிஞ்சி புரம் (வேலூர்), காஞ்சீபுரம், மகாபலிபுரத்தில் தலா 3 செ.மீ., திருக்கோவிலூர், நாமக்கல், கமுதி, வேலூர், மேலூர், விழுப்புரம், திருச்சுழி, உத்திரமேரூர், திண்டிவனம், வந்தவாசியில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அருப்புக்கோட்டை, புதுவை, சித்தம்பட்டி, திருவள்ளூர், செஞ்சி, செந்துறை, பள்ளிப்பட்டு, மரக்காணம், வானூர், காவேரிப்பாக்கம், பூண்டி, பாரூர், கும்பகோணம், செய்யூர், கொல்லிமலை, குடியாத்தத்தில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

Tags: 24 hour strong rainTamil Nadu

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :