யாழ்ப்பாணத்தில் சுமூகமான நிலைமையே என்கிறார் பிரதி காவல்துறை மா அதிபர்

0
266
no violence northern province jafna district Lankan local latest news

யாழ்ப்பாணத்தில் நல்லூர் உற்சவம் நடைபெற்று வருகின்ற நிலையில் பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார். no violence northern province jafna district Lankan local latest news

சிறு சிறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதே தவிர பாரிய சம்பவங்கள் எதுவும் இதுவைர பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் நிலைமை தற்போது அமைதியாக உள்ளதாகவும் வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக 100க்கும் அதிகமான விசேட காவற்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை , யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் வீடு ஒன்றினுள் நுழைந்து வன்முறையில் ஈடுப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
no violence northern province jafna district Lankan local latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites