வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. TNA Refuses North Province Chief Minister Vigneswaran Request Tamil News
வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது.
இ ந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரன் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கூடி ஆராய்ந்துள்ளது.
இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளது.
இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
இவற்றை குறித்து பேசுவதற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஐனாதிபதி செயலணி அமைந்துள்ளது.
ஆகவே செயலணியின் கூட்டத்தில் நிச்சமாக கலந்து கொள்ளவேண்டும் என பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதனை யடுத்து கூட்டத்தில் கலந்து கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்